பெரியம்மாவாகியிருக்கிறேன்!!!!!!!!!!!!!
பெண்களால் நிறைந்த என் தாய் வழிச் சமூகத்தில் முதல் ஆணாக வந்து பிறந்தவரை நேற்று இரவு பத்து மணி இருபது நிமிடங்களுக்குக் கண்ணில் காட்டினார்கள். ஹேமஸ்ரீயின் ஆசைப்படியே கிருஷ்ணாத் தம்பி (போகோ அலைவரிசையின் கார்ட்டூன் பாத்திரம்) பிறந்திருக்கிறார். வயிற்றுக்குள் இருக்கும் போது தன் அம்மா ஆசைப்பட்டு ரசகுல்லா சாப்பிட்ட நேரங்களில் மட்டும் அதிகமான அசைவுகளைக் காட்டியவர் என்பதால் அவருக்கு "ரசகுல்லா மாயாண்டி" என்ற செல்லப் பயரும் இருக்கிறது.
கன்னத்தைத் தடவி "குட்டித் தம்பீ..." என்று அழைத்த போது குட்டிக் கண்களால் விழித்துப் பார்த்தவர் "ஹ்ஹூ...ம்" என்று மிரட்டிவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டார். நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது பிறந்த என் தங்கை காயத்ரியை முதன் முதலில் கையில் வாங்கியவள் நான்தான். இப்போது அவள் குழந்தையையும்.... அவ்வகையில் அவர் என் குழந்தையின் குழந்தை. அவரைக் "கொண்டாடவும்", "குறிப்பறிந்து பணி செய்யவும்" தயாராகிக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் நான்கு வாரங்கள் முழுதாய் இருக்க அவசரக் குடுக்கையாக வந்துவிட்டவரை இப்போது கண்ணாடிப் பெட்டி அடைகாத்துக் கொண்டிருக்கிறது. தம்பியுடன் நேரத்தைக் கழிக்க ஹேமஸ்ரீ இப்போதிருந்தே திட்டமிடத் துவங்கிவிட்டாள். இருந்தாலும் waiting for the super hit episodes of Sibling Rivalry.
1 comment:
சில சந்தோச தருணங்கள் பகிரப்படும் போது மற்றவர்களையும் தொற்றிகொள்கிறது.அதே போல் நகைச்சுவையும் கூட.
ரசத்துக்கு மட்டும் குல்லா போடாம சாம்பாரு,மோரு,கூட்டு,பொரியல்,அவியல் எல்லாத்துக்கும் குல்லா போடுங்க.
Post a Comment